Enable Javscript for better performance
நாமக்கல்லில் பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி சேவை பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல்லில் பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி சேவை பாதிப்பு

    By நாமக்கல்  |   Published on : 17th April 2015 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் சேவை திடீரென பாதிப்படைந்ததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் புத்துணர்ச்சி பெற்று பல்வேறு தொழில்நுட்ப முறைகளைக் கையாண்டு 2ஜி, 3ஜி என சாதனை படைத்து வந்தாலும், தனியார் நிறுவனத்தோடு போட்டியிட முடியாமல் திணறி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் செல்லிடப்பேசி, பிராட்பேண்ட் சேவை இரண்டுமே பெங்களூரை மையமாக வைத்து தான் இயக்கப்படுகிறது. தற்போது அடிக்கடி செல்லிடப்பேசி, பிராட்பேண்ட் சேவைகள் முற்றிலும் செயலிழந்து போவது அதிகரித்துள்ளது.

    பிஎஸ்என்எல் நிறுவன சேவையை லட்சக்கணக்கானோர் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நிலையில், இன்னும் அடிப்படை வசதிகளைக்கூட வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாமல் திணறி வருகிறது.

    இந்நிலையில், வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிஎஸ்என்எல் செல்போன் சேவை நாமக்கல் மாவட்டத்தில் முற்றிலும் செயல் இழந்தது. இதனால் ஏராளமானோர் ரயில் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளைப் பெறமுடியாமலும், தகவல்களைப் பரிமாற முடியாமலும் திணறினர். எவ்விதமான முன் அறிவிப்புமின்றி தடை ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் பெரும் அவதிக்குள்ளாகினர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை பாதிக்கப்பட்டதாக வழக்கமான பதிலை தெரிவித்த அதிகாரிகள், சீரமைக்கும் பணி நடைபெறுகிறது சரியாகிவிடும் என சொல்லிக்கொண்டே

    இருந்தனர்.

    பிற்பகல் 2 மணிக்குப் பிறகு பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி சேவை சீரானாலும், மீண்டும் மாலை 4 மணி முதல் சேவை கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai