Enable Javscript for better performance
பணிக்குத் திரும்பிய சத்துணவு ஊழியர்கள்:வெறிச்சோடிய போராட்ட மையம்- Dinamani

சுடச்சுட

    

    பணிக்குத் திரும்பிய சத்துணவு ஊழியர்கள்:வெறிச்சோடிய போராட்ட மையம்

    By நாமக்கல்  |   Published on : 17th April 2015 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரும்பாலான சத்துணவு ஊழியர்கள் பணிக்குச் சென்றதால், நாமக்கல்லில் வியாழக்கிழமை அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்ட பந்தல் வெறிச்சோடி காணப்பட்டது.

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்குதல், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ரூ.3,500 வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை (ஏப். 15) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, அமைச்சர்கள் பழனியப்பன், வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என சங்கத்தினர் தெரிவித்தனர்.

    அதன்படி, வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டு, நாமக்கல் நகராட்சி திருமண மண்டபம் முன் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

    காலை 10 மணிக்கு போராட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முற்பகல் 12 மணி வரை 5 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

    அதிகாரிகளின் மிரட்டலுக்குப் பயந்து ஊழியர்கள் வேலைக்குச் சென்றுவிட்டதால், பணி முடிந்து மாலையில் போராட்ட மையத்துக்கு வருவார்கள் என சங்க மாவட்டத் தலைவர் சுப்ரமணி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai