Enable Javscript for better performance
பலத்த மழையில் 20-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள் பழுது- Dinamani

சுடச்சுட

    

    பலத்த மழையில் 20-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள் பழுது

    By பரமத்தி வேலூர்  |   Published on : 17th April 2015 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் அருகே நன்செய் இடையாறு அம்மன் கோயில் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ததில், அப் பகுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்டவை பழுதடைந்தன.

    நன்செய் இடையாறு அம்மன் கோயில் பகுதியில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. அப்போது இடி இடித்ததில், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்துள்ளதாக அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். மேலும், பழுதடைந்த தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் குளிர்சாதனப் பெட்டி ஆகியவைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai