Enable Javscript for better performance
\\\"பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு இளம் வயது திருமணம் முக்கியக் காரணம்- Dinamani

சுடச்சுட

    

    "பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு இளம் வயது திருமணம் முக்கியக் காரணம்

    By 'நாமக்கல்  |   Published on : 17th April 2015 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, இளம் வயது திருமணம் முக்கியக் காரணமாக இருக்கிறது என இளம் வயது திருமண தடுப்புச் சட்டம் குறித்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

    நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், வியாழக்கிழமை நடந்த கருத்தரங்கில் மருத்துவர் எ.அருணாசலம், வழக்குரைஞர் பி.ரேகா

    ஆகியோர் பேசியது:

    இளம் வயது திருமணத்துக்கு வறுமை, போதிய கல்வி அறிவில்லாமை, பெண் குழந்தைகளை குடும்பச் சுமையாகக் கருதுவது, இடம் பெயர்ந்து வாழும் நிலை, சமூகத்தில் பெண்ணை அடிமைப் படுத்துவது, வரதட்சிணைக் கொடுமை, குறைந்து வரும் பாலின சதவீதம், பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாக்க விழிப்புணர்வு இல்லாதது போன்றவை காரணமாக கூறப்படுகிறது.

    இவ்வகை திருமணங்களால், பெண்ணுக்குக் கல்வி தடைபடும், தன்னம்பிக்கை குறையும், அடிக்கடி கருவுறுதல், கருக்கலைவால் சத்துப் பற்றாக்குறை, இளம் வயதில் கர்ப்பப்பை முழு வளர்ச்சியில்லாதது, பிரசவத்தின்போது தாய், சேய் மரணமடைதல், எடை குறைவாக, ஊனமுற்று குழந்தை பிறத்தல், ரத்தசோகை, உடல், மனம் பலவீனமடைதல், நோய் மற்றும் வறுமைக்கு வழிவகுக்கும். குடும்பத்தை வழிநடத்த முடியாமல், குழந்தைகள் பணிக்குச் செல்லும் நிலை ஏற்படும்.

    1978-இல் திருத்தம் கொண்டு வரப்பட்ட இளம் வயது திருமண தடுப்புச் சட்டத்தில், பெண்ணுக்குத் திருமண வயது 18, ஆணுக்கு 21 என்ற நடைமுறை வந்தது. இச்சட்டங்கள் இருந்தபோதும் 50 சதவீதத்துக்கு மேல் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து வைப்பது இன்றைய நவீன உலகிலும் உள்ளது.

    தமிழகத்தில் 28 சதவீதம் இளம் வயது தாய்மார்கள் பிரசவ காலத்தில் உயிரை இழக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் சிசு மரணம், ஒரு லட்சம் மகப்பேறில் 301-ஆகவும், தமிழகத்தில் ஒரு லட்சம் மகப்பேறில் 111 என்ற எண்ணிக்கையில் உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 20 முதல் 24 வயதில் திருமணம் புரிவோருடன் ஒப்பிடுகையில், மகப்பேறு மரணம் 15 முதல் 19 வயதுக்குள் ஐந்து மடங்கு அதிகம் உள்ளது.

    இதனால் சட்டத்தின் மூலம் இளம் வயது திருமணத்தைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டாலும், மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டால் தான் பெண் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றனர்.

    முன்னதாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன் தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணி பள்ளி வளாகம் வரை நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட சமூக நல அலுவலர் ஷெரின் பிலிப், மகளிர் திட்ட அலுவலர் திருவரங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் எஸ்.ரேவதி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம்.செல்வம் உள்ளிட்டோó பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai