Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிள் திருடிய 3 இளைஞர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    மோட்டார் சைக்கிள் திருடிய மூன்று இளைஞர்களை, போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை சேந்தமங்கலம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக தனித்தனியே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்களை நிறுத்தி ஆவணங்களைக் கேட்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், சேந்தமங்கலம் கிழக்கு ஜங்களாபுரத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கவிராஜன் (21), காமராஜர்புரத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் பாண்டியன் (19), முருகேசன் மகன் மணிகண்டன் (24) என்பதும், அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டவை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து மூன்று மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai