Enable Javscript for better performance
3 மாணவர்கள் இறந்த பகுதியில் சாலையை விரிவுபடுத்த கோரிக்கை - Dinamani

சுடச்சுட

    

    3 மாணவர்கள் இறந்த பகுதியில் சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

    By நாமக்கல்,  |   Published on : 17th April 2015 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிபாளையம் அருகே கல்லூரி மாணவர் மூன்று பேர் விபத்தில் பலியான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடையால் பலன் ஏதும் இல்லை. மாறாக இங்கு சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    கடந்த 14-ஆம் தேதி ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து பள்ளிபாளையம் அருகே ஐந்துபனை என்ற இடத்தில், சுமை ஆட்டோ மீது மோதிய விபத்தில் பேருந்தின் படியில் பயணம் செய்த தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, சம்பவ இடத்தை ஆய்வு செய்து, வேகத்தடை அமைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையின் குறுக்கே வேகத்தடை புதன்கிழமை அமைக்கப்பட்டது.

    விபத்து நடந்த பகுதியில் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலி, காயம் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

    ஆனால், அவற்றை எதுவும் செய்யாமல் வேகத்தடை அமைப்பது எந்த பலனையும் அளிக்காது. அதனால் சாலையை விரிவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai