Enable Javscript for better performance
74 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    74 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்

    By நாமக்கல்,  |   Published on : 17th April 2015 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் 74 கிராம ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது.

    தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில், முதல் கட்டமாக 2,000 ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகள், சுற்றுலா மற்றும் புனிதத் தலங்கள் உள்ள கிராம ஊராட்சிகள், பெரிய தொழிற்சாலைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ள கிராமங்கள், தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள 74 கிராம ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்கள் மூலம் குப்பைகளை அகற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    திடக்கழிவு மேலாண்மைத் திட்ட நடவடிக்கை என்பது வீடுகளிலிருந்து குப்பைகள் மற்றும் கழிவுப் பொருள்களை சேகரித்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பை என பிரித்தெடுத்து பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

    திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளில், 74 ஊராட்சிகளில் உள்ள 150 குடும்பங்களுக்கு ஒரு பணியாளர் என்ற வகையில் ஈடுபடுத்தப் படுவார்கள். இவர்கள் தூய்மைக் காவலர்கள் என்றழைக்கப்படுவார்கள்.

    இவர்களுக்கு ஊதியம் வழங்கி, இவர்களது பணியைக் கண்காணிக்கும் பொறுப்பு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்தது.

    திடக்கழிவு மேலாண்மைத் திட்ட நிதியில் இருந்து மூன்று சக்கர வண்டிகள், பிளாஸ்டிக் கழிவுகளை நறுக்கி மறுசுழற்சி செய்வதற்கான இயந்திரங்கள், சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள், தூய்மைக் காவலர்களுக்கு மேல்சட்டை, கையுறைகள், அடையாள அட்டை, தொப்பி ஆகியவை வழங்கப்படும்.

    இத்திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவிக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வரும் 18-ஆம் தேதி பயிற்சி நடைபெற உள்ளது.

    இதைத் தொடர்ந்து கிராம அளவில் தூய்மைக் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 74 ஊராட்சிகளில் வரும் மே முதல் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படஉள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai