சுடச்சுட

  

  நாட்டுக்கோழி குஞ்சுகள் பராமரிப்புக்கு இலவசப் பயிற்சி

  By DN  |   Published on : 12th August 2015 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி குஞ்சுகளின் இறப்பைக் கட்டுப்படுத்துதல், பராமரிப்பு முறைகள் குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

  பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் பி.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

  இதுகுறித்து பயிற்சி முகாமில் நாட்டுக்கோழி ரகங்கள், குஞ்சு பொரிக்கும் முறை,  குஞ்சு பொரிப்பான்களின் பயன்கள், வளர்ப்பு முறைகள், தீவன அளவுகள் குறித்த பயிற்சி நடத்தப்பட உள்ளது. மேலும், இந்தப் பயிற்சியில் நாட்டுக்கோழி குஞ்சுகளைத் தாக்கும் பல்வேறு நோய்கள், அதன் அறிகுறிகள், அவற்றைத் தடுக்கும் முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்படும். இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். 

   விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 04286-266345 என்ற தொலைபேசி மூலமாகவோ வரும் 17-ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai