Enable Javscript for better performance
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க வேண்டும்

    By நாமக்கல்,  |   Published on : 01st January 2015 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பள்ளிகளைப் போல, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை வரும் கல்வியாண்டில் தொடங்க வேண்டும் என, ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியது.

    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் கு.சி.மணி தலைமையில் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொதுச்செயலர் செ.முத்துசாமி தீர்மானங்கள் குறித்து விளக்கினார். பொருளர் தெ.அலெக்சாண்டர் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.

    இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் ரூ.5,500 ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பைச் சரிச் செய்வதுடன், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

    நாடு முழுவதும் கல்வி நிலையங்களில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா கொண்டாட உத்தரவிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், ஜனவரி 11-ஆம் தேதி, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் திருப்பயணத்தை தொடங்கும் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய்க்கு மாவட்டத் தலைமையிடங்களில் சிறப்பான வரவேற்பு அளிப்பது.

    கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆண்டுக்கு 450 மி.மீ. வீதம் மழை பெய்து, 13 ஆறுகள் வழியாகப் பாய்ந்து சென்று சுமார் 2,000 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீரை கர்நாடகத்தில் வறண்ட பகுதிக்கும், மேட்டூர் அணைக்கும் திருப்பி விட வேண்டும்.

    அரசுப் பள்ளிகளைப் போல, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி முறையை வரும் கல்வியாண்டில் தொடங்க வேண்டும். சி.ஆர்.சி. கூட்டங்களில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநில துணைத் தலைவர்கள் கே.பி.ரக்க்ஷித், க.முருகேசன், ம.பாலகிருஷ்ணன், துணைப் பொதுச் செயலர் க.செல்வராஜு, சு.அருள்சாமி, மாநில முன்னாள் பொருளர் ராமசாமி, மாவட்டச் செயலர் செல்வக்குமார், விஜயகுமார், செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai