சுடச்சுட

  

  திராவகம் வீசப்பட்ட செவிலியருக்கு நிவாரணம் வழங்கக் கோரி, கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார்.

  திராவகம் வீசப்பட்டதில் காயமடைந்த கிராம சுகாதார செவிலியர் விஜயகுமாரிக்கு உயர்சிகிச்சை அளிப்பதுடன், நிவாரண உதவி அளிக்க வேண்டும். திராவகம் வீசியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

  மாவட்டத் தலைவர் அன்புச்செல்வி, செயலர் செளந்தரம், பொருளாளர் சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai