சுடச்சுட

    

    குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்கம் தூய்மைப் பணி

    By குமாரபாளையம்,  |   Published on : 01st January 2015 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் நகராட்சி தெருக்களில் அபெக்ஸ் சங்கம் சார்பில், தூய்மைப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

    முன்னதாக, நகராட்சியின் 20, 24-ஆவது வார்டுகளில் அனைத்து வீடுகளின் கழிப்பறை செப்டிக் டேங்க் குழாய்களில் கொசுவலை கட்டப்பட்டது. தொடர்ந்து, லஷ்மிநாராயணா கோயில் உள்பட அனைத்து கோயில்களுக்கும் தலா 4 குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன. மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து அபெக்ஸ் சங்க காலனியில் குப்பைகள் அகற்றப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு, அந்தச் சங்கத்தின் தலைவர் பி.ஈ.ஈஸ்வர் தலைமை வகித்தார். குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன், ஆணையர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்தச் சங்கச் செயலர் ஆர்.சண்முகம், சேவை இயக்குநர்கள் எஸ்.பிரபு, கே.எஸ்.கதிர்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அந்தச் சங்க நிர்வாகிகளுடன் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai