சுடச்சுட

    

    குமாரபாளையம் நகர்மன்றக் கூட்டம்: திமுக வெளிநடப்பு

    By குமாரபாளையம்,  |   Published on : 01st January 2015 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை அகற்ற வலியுறுத்தி, திமுக உறுப்பினர்கள் நகர்மன்றக் கூட்டத்திலிருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

    குமாரபாளையம் நகர்மன்றக் கூட்டம் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, ஆணையர் என்.சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள்:

    கே.வெங்கடேசன்: குமாரபாளையம் நகராட்சியில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். எனவே, கூடுதலாக மையங்களைத் திறக்க

    வேண்டும்.

    எஸ்.பாலகிருஷ்ணன்: 3-ஆவது வார்டு உழவர் சந்தையின் பின்பகுதியில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால், இரவில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. அந்தப் பகுதியில் மின் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்றார்.

    மேலும், நகராட்சி பகுதியில் கொசு மருந்துகள் போதிய அளவில் தெளிப்பதில்லை. இதனால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. பலமுறை கூட்டத்தில் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என உறுப்பினர்கள் கே.ஆர்.சிவசுப்பிரமணியம், சி.கனகராணி, கே.ஜி.பழனிச்சாமி ஆகியோர் புகார் தெரிவித்தனர்.

    தலைவர் தனசேகரன்: பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து விரைவாகத் தீர்வு காணப்பட்டு வருகிறது.

    கே.வெங்கடேசன்: நகராட்சி பொதுநிதியில் அனைத்து வார்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தேவைகளை நிறைவேற்ற வேண்டும். நகராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டுள்ளது.

    இதை மாற்றி தற்போதைய முதல்வரின் படத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தார். தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai