சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் சைல்டு லைன் உதவியுடன் 405 குழந்தைகள் மீட்பு

    By நாமக்கல்  |   Published on : 01st January 2015 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சைல்டு லைன், பல்வேறு அரசுத் துறை அமைப்பின் சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 405 குழந்தைகள் பல்வேறு வன்முறைக்கும் இடையே மீட்கப்பட்டனர். இது தொடர்பாக 18 பேர் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை சைடு லைன், லீப் சொசைட்டி சார்பில்,

    96 குழந்தைத் திருமணங்கள், 34 குழந்தைத் தொழிலாளர், 34 காணாமல் போன குழந்தைகள், 34 பிச்சை எடுத்த குழந்தைகள், மூன்று கைவிடப்பட்ட குழந்தைகள், 38 துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகள், 49 பள்ளி இடைநின்ற குழந்தைகள், 128 உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு தேவைப்பட்ட குழந்தைகள், இரண்டு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என, 405 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில், 226 பெண் குழந்தைகள், 179 ஆண் குழந்தைகள்.

    மேலும், மாவட்ட சமூக நலத் துறை, குழந்தைகள் நலக் குழுமம், சைல்டு லைன், தொழிலாளர் நலத் துறை, ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, பிரச்னைகளைத் தீர்த்து வைக்கின்றன.

    கடந்த ஓர் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் மீது 18 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டில் 33 முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியுள்ளன.

    மேலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வை 1098 என்ற சைல்டு லைன் அமைப்பினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், குழந்தைத்

    திருமணத்தைத் தடுக்கும் வகையில், கிராம அளவில் ஊராட்சித் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு சட்டத்தை மீறிச் செயல்படுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டாலும், பெற்றோர்களின் கல்லாமை, சமூகச்சூழலால் அதிகப்படியான குழந்தைத் திருமணம் நடக்கிறது.

    மாவட்டத்தில், கடந்த ஓர் ஆண்டில், சைடு லைன், லீப் சொசைட்டி சார்பில், 405 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். பெற்றோர், சமூக அக்கறை உடையவர்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் முழுமையாகப் பாதுகாக்க முடியும் என சைல்டு லைன் அமைப்பினர் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai