Enable Javscript for better performance
நாமக்கல் மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By நாமக்கல்  |   Published on : 01st January 2015 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் எஸ்.சந்தானம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஜனவரி 7-ஆம் தேதியும், பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஜன. 14 -ஆம் தேதியும், ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஜன. 21-ஆம் தேதியும், திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஜன. 28-ஆம் தேதியும் காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தக் கூட்டங்களில், அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மின்நுகர்வோர்கள் பங்கேற்று குறைகளைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai