Enable Javscript for better performance
\\\"நுகர்வோர் விழிப்புணர்வுப் பணியை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    "நுகர்வோர் விழிப்புணர்வுப் பணியை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்

    By 'நாமக்கல்,  |   Published on : 01st January 2015 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் பள்ளி மாணவர்கள் ஈடுபட வேண்டும் என, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.லட்சுமிகாந்தன் பாரதி தெரிவித்தார்.

    தமிழ்நாடு நுகர்வோர், மக்கள் உரிமைகள் புலனாய்வுக் குழு நாமக்கல் கிளை, சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், தேசிய நுகர்வோர் தின விழா, பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    தமிழ்நாடு நுகர்வோர், மக்கள் உரிமைகள் புலனாய்வுக் குழு மாநிலத் தலைவர் எஸ்.செல்வம் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் அ.வைத்தியலிங்கம், திருச்செங்கோடு காந்தி ஆசிரம துணைத் தலைவர் எஸ்.ஆராவமுதன், நுகர்வோர் புலனாய்வுக் குழு பொதுச் செயலர் ஜி.இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.உதயக்குமார் வரவேற்றார்.

    மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எஸ்.ராமகிருஷ்ணன், மாவட்டத் தொழிலாளர் ஆய்வாளர் சி.மஞ்சள்நாதன், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் கு.தமிழ்செல்வன் ஆகியோர் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து பேசினர்.

    நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்ளை வழங்கி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி பேசியது:

    பணம் செலுத்தி சேவை பெறுபவர்கள் அனைவரும் நுகர்வோர் தான். தனியார், பொதுத் துறை, அரசுத் துறை என எந்தத் துறையானாலும், பணம் செலுத்தி பெற்ற சேவையில் குறைபாடு இருந்தால் நுகர்வோர் அமைப்புகள் மூலம் குறைதீர்மன்றத்தை அணுகலாம். பள்ளி மாணவர்கள் நுகர்வோர் உரிமைகள் குறித்து அறிந்து கொண்டு, நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.

    மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்ற உறுப்பினர் எஸ்.பாலசுப்ரமணியம், காந்தி ஆசிரமச் செயலர் சின்னுசாமி, நுகர்வோர் புலனாய்வுக் குழு மாநிலச் செயலர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலர் கே.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai