Enable Javscript for better performance
பகவதியம்மன் கோயிலில் தீ மிதி விழா- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் வட்டம், கு.அய்யம்பாளையத்தில் பகவதியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.

    விழாவை முன்னிட்டு, கடந்த 26-ஆம் தேதி பக்தர்கள் காவிரியாற்றிற்குச் சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுடன் பகவதியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அன்றிரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூச்சூட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    டிச.29-ஆம் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை மாலை பூக்குண்டம் இறங்குதலும் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். அன்றிரவு பெண்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றுதலும், வானவேடிக்கையும் நடைபெற்றது. புதன்கிழமை மஞ்சள் நீராட்டும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை பகவதியம்மன் கோயில் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai