சுடச்சுட

    

    போக்குவரத்து அதிகாரிகள் சோதனை: 41 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு

    By நாமக்கல்,  |   Published on : 01st January 2015 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வட்டாரப் போக்குவரத்து துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் விதிமுறைகளை மீறிய 41 வாகன ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    நாமக்கல், வடக்கு, தெற்கு வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கே.எஸ்.துரைசாமி, ஏ.கருப்பண்ணன் ஆகியோர் தலைமையில் நாமக்கல் - திருச்சி சாலை, மோகனூர் சாலையில் புதன்கிழமை காலை வாகனச் சோதனை நடைபெற்றது.

    இதில், 156 வாகனங்கள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டு, 41 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. தகுதிச் சான்று இல்லாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியது, தலைக்கவசம் அணியாதது போன்றவை குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

    ஆய்வின் போது, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் டி.தாமோதரன், ஆர்.பிரதீபா, வி.கதிர்வேல், டி.சண்முகஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai