சுடச்சுட

  

  மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல்: 35 பேர் கைது

  By நாமக்கல்  |   Published on : 01st January 2015 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நதி நீர் பிரச்னையில் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட

  35 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

  கேரளம், கர்நாடக மாநில அரசுகள், தமிழகத்துக்கான நதிநீர் உரிமையில் தொடர்ந்து அத்துமீறுவதைத் தடுக்க வேண்டும். தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும் பள்ளிபாளையத்தில் ரயில் மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

  திராவிடர் விடுதலைக் கழக நகரச் செயலர் முத்துப்பாண்டி, கொங்கு இளைஞர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, அருந்தமிழர் பேரவை உள்ளிட்ட 12 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பள்ளிபாளையம் காவிரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்து வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு பெண் உள்பட 35 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai