சுடச்சுட

    

    "மாணவர்கள் படிப்புடன் நல்ல பண்பு உள்ளவராகவும் இருக்க வேண்டும்'

    By ராசிபுரம்  |   Published on : 01st January 2015 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்கள் படிப்புடன் நல்ல பண்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என வெற்றி விகாஸ் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற தமிழக கடலோரப் பாதுகாப்புப்படை கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

    ராசிபுரம் அருகே, கீரனூர் வெற்றி விகாஸ் பள்ளியில் 10-ஆவது ஆண்டு விழா ஆண்கள் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

    விழாவுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் தலைமை வகித்தார். பள்ளிகளின் நிறுவனர் டாக்டர் கே.குணசேகரன் வரவேற்றார். பள்ளிகளின் தலைவர் எஸ். கணேசன், தாளாளர் கே.வெற்றிச்செல்வன், செயலர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் பழனிவேல், இணைச் செயலர் ஆர்.யு.சிற்றரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழக கடலோரப் பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியது: வாழ்க்கையில் முன்னேற கல்வி அவசியம். அதை போதிப்பவர்கள் மதிக்கத்தக்கவர்கள். மாணவர்களின் உள்ளத் திறமையை வெளியில் கொண்டு வருவது தான் கல்வி. மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல பிற திறமைகளும் வேண்டும். உதாரணமாக மேடையில் பேசுவது, பாடுவது, நாடகத்தில் நடிப்பது, விளையாடுவது போன்றவை தலைமைப் பண்பை வளர்க்கும்.

    குறிப்பாக சொன்னால் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் நல்ல மனிதராக இருக்க வேண்டும். குழந்தைகள் விரும்புவதை செய்யவிட வேண்டும். மாணவர்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்வதற்கு பெற்றோர் முன்வர வேண்டும். ஒரு மணி நேரமாவது விளையாட வேண்டும். உடல் நல்ல முறையில் இயங்க வேண்டும் என்றால் ஒரு மணி நேரமாவது உடல்பயிற்சி செய்ய வேண்டும் என்றார்.

    தொடர்ந்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி பரிசளித்தார். மேலும் சிறப்பாகப் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai