சுடச்சுட

    

    ஸ்ரீவித்யா மந்திர் கல்லூரியில் குடிமை பயிற்சி முகாம்

    By ராசிபுரம்,  |   Published on : 01st January 2015 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் கல்வியியல் கல்லூரி சார்பில், சமூகப்பணி குடிமைப் பயிற்சி முகாம் பால்மடையில் அண்மையில் ஐந்து நாள்கள் நடைபெற்றது.

    பால்மடை அருள்மிகு நல்லபுள்ளி அம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற தொடக்கவிழாவில், கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.கே.ஏ.முருகேசன் தலைமை வகித்தார்.

    கல்லூரித் தலைவர் எம்.ராமகிருஷ்ணன், பள்ளிச் செயலர் என்.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொருளர் ஏ.சுந்தரராஜன், அறக்கட்டளை துணைத் தலைவர் வி.சி.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரி அரசியல், அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ஆர்.சிவக்குமார் பங்கேற்று மனித உரிமைகள் குறித்த அறிமுகம் என்ற தலைப்பில் பேசினார்.

    முகாமில், கோயில் வளாகம் தூய்மை, மரம் நடுதல், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு, தலைமைப் பண்பு வளர்ப்பு, ஆளுமை திறன் வளர்ப்பு குறித்த பயிலரங்கு நடைபெற்றது.

    முகாமில், பள்ளி நிறுவனர் டாக்டர் ஆர்.எம்.கிருஷ்ணன், பள்ளி இணைச் செயலர் ஆ.நாகமாணிக்கம், அறக்கட்டளைச் செயலர் சு.பெத்தண்ணன், பொருளாளர் ஏ.பாலகிருஷ்ணன், பள்ளித் தாளாளர் மு.குமாரசுவாமி, இணைச்செயலர் ஏ.ராமதாஸ், சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai