சுடச்சுட

    

    7.82 லட்சம் பேருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள்

    By நாமக்கல்,  |   Published on : 01st January 2015 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் 7,82,400 பேருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளதாக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத் தொடக்கவிழா நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வெப்படை நியாய விலைக் கடையில் புதன்கிழமை நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி. எஸ்.செல்வக்குமார சின்னையன் முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் பி.தங்கமணி பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கிப் பேசியது:

    தமிழகத்தில், பொங்கல் பண்டிகை அன்று அனைவரும் புத்தாடை அணிந்து புதுப்பொலிவோடு கொண்டாட வேண்டும் என்பதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை, நாமக்கல் வட்டத்தில் 1,19,238, ராசிபுரம் வட்டத்தில் 76,620, கொல்லிமலை வட்டத்தில் 10,969, பரமத்தி வேலூர் வட்டத்தில் 49,907, திருச்செங்கோடு வட்டத்தில் 1,34,466 பேர்கள் என மொத்தம் 3,91,200 பேர்களுக்கு விலையில்லா வேட்டிகள், 3,91,200 பேருக்கு விலையில்லா சேலைகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 7,82,400 பேருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன.

    குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த நாளில் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்படும் என்ற விவரம் அந்தந்த நியாயவிலை கடைகளில் பட்டியலிட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதில் குறிப்பிட்டுள்ளபடி, குடும்ப அட்டைதாரர்கள் சென்று சிரமமின்றி வேட்டி, சேலைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

    விழாவில், 56 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரா.சுப்புலட்சுமி, திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் சுமன், வட்டாட்சியர் குப்புசாமி, டி.சி.எம்.எஸ். தலைவர் டி.என்.கந்தசாமி, பள்ளிபாளையம் நகர்மன்றத் தலைவர் வெள்ளியங்கிரி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.கே.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai