சுடச்சுட

    

    ஆங்கிலப் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி:கோயில்களில் சிறப்புப் பூஜைகள்

    By பரமத்தி வேலூர்  |   Published on : 02nd January 2015 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பாண்டமங்கலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகளும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமியைத் தரிசனம் செய்தனர்.

    கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி, பொத்தனூர் அருகே பச்சமலை முருகன் கோயில்,பிலிக்கல்பாளையம் முருகன் மலையில் சிறப்பு பூஜை, அலங்காரங்கள் நடைபெற்றன.

    பரமத்திவேலூர் பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, வேலூர் மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மகா மாரியம்மன், சத்திரத்துப் பிள்ளையார் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai