Enable Javscript for better performance
இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    புத்தாண்டு கொண்டாட இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மரத்தில் மோதியதால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

    சேலம் பெரியபுதூர் அருண்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனிசேகர். இவரது மகன் சுதாகரன் (22). சேலம் வின்சென்ட் பகுதியில் பூக்கடை வைத்துள்ள இவர், நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாட

    குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்றார்.

    பின்னர், நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பிய போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில், பலத்த காயமடைந்த சுதாகரனை மீட்ட அவரது நண்பர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முனைந்தனர். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து சேலம் போக்குவரத்துத் துறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai