சுடச்சுட

  

  தனியார் துறை பாதுகாப்புப் பணிகளில் வேலைவாய்ப்புப் பெறும் வகையில் திறன் எய்தும் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இளைஞர்கள் தனியார் துறையில் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் பாதுகாப்பு சேவைப் பணிகள் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

  தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் இத் திறன் எய்தும் பயிற்சி, தமிழ்நாடு காவல் துறையுடன் இணைந்து வழங்கப்படுகிறது. பயிற்சிக் காலம் 21 நாள்கள் ஆகும்.

  இலவசமாக அளிக்கப்படும் இப்பயிற்சியில் சேர குறைந்த பட்சம் 8ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதில் இருந்து 45 வயதுக்கு மிகாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். பயிற்சி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடைபெறும்.

  விருப்பமுள்ளவர்கள் தங்களது அசல் கல்விச் சான்று, ஜாதி சான்று, குடும்ப அட்டை அசல், சமீபத்திய 2 புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரும் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் காவல்துறையின் பயிற்சி மைதானத்தில் வழங்கப்படும் மொத்தம் 250 பேருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

  பயிற்சியின் நிறைவில் தனியார் துறை பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் பணியில் சேருவதற்கு ஏதுவாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai