Enable Javscript for better performance
உயர் நீதிமன்ற உத்தரவு:காந்தி ஆசிரமத்தில் 46 பேருக்குப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    உயர் நீதிமன்ற உத்தரவு:காந்தி ஆசிரமத்தில் 46 பேருக்குப் பயிற்சி

    By நாமக்கல்  |   Published on : 02nd January 2015 03:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் 46 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டம், சாமிசெட்டிப்பட்டி கிராமத்தில் முருகன் கோயில் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் 46 நபர்களை 3 வாரங்களுக்கு காந்தி ஆசிரமப் பணிகளில் பயிற்சி பெற உத்தரவிட்டது.

    இதன்படி திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நூற்பு, நெசவு மற்றும் சோப்பு தயாரித்தல், ஊதுபத்தி பேக்கிங் செய்தல், கைக்காகித பைல் தயாரித்தல், இலவங்காய் உடைத்தல் போன்ற பணிகளில் 46 பேரும் பயிற்சி பெற்றனர்.

    இதையடுத்து, பயிற்சியாளர்களுக்கு திருச்செங்கோடு காந்தி ஆசிரம துணைத் தலைவர் ஆராவமுதன், ஆசிரம வரலாறு மற்றும் பணிகளைப் பற்றியும், சிறப்புகளையும் எடுத்துக் கூறினார்.

    முன்னதாக, காந்தி ஆசிரம புள்ளி விவர அலுவலர் பிரமுத்து சர்வசமய பிரார்த்தனைப் பாடலைப் பாடினார். ஆசிரம கிராம கைத்தொழில் மேம்பாட்டு அதிகாரி சின்னசாமி வரவேற்றார்.

    காந்தி ஆசிரமத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசாமிக்கு சேம

    நிதித் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. பல்லடம் போலீஸ் எஸ்ஐ ஸ்ரீராமன், சுகாதாரத் துறை ஆய்வாளர் வீரமலை, பயிற்சியாளர் முனிரத்தினம், காந்தி ஆசிரம ஊழியர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai