சுடச்சுட

    

    கடந்த ஆண்டில் 66 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

    By நாமக்கல்,  |   Published on : 02nd January 2015 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 66 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

    குழந்தைகளைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதன்படி 14 வயதுக்குக் கீழ் உள்ளவர்களை வேலைக்கு வைத்திருக்கும், கடைக்காரர்கள், தொழில்சாலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களைப் படிக்க வைப்பதற்காக கடந்த 2005-ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.

    தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இம்மையம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 20 இடங்களில் இச்சிறப்புப் பயிற்சி மையம் செயல்படுகிறது.

    இதுகுறித்து துறை அதிகாரி ஒருவர் கூறியது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 20 குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பயிற்சி மையங்களில் மொத்தம் 515 பேர் பயில்கின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 66 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இங்கு 8-ஆம் வகுப்பு வரை கல்வி, தையல் உள்ளிட்ட தொழில்கல்வியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    இம்மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் தோறும் உதவித் தொகையாக ரூ.150 வழங்குகிறது. அந்தத் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    இவர்கள் பயிற்சி மையத்தை விட்டுச் செல்லும்போது மொத்தமாக அந்த பணம் கொடுக்கப்படுகிறது. 14 வயது பூர்த்தியடைந்ததும், மாணவர்கள் அவர்களின் விருப்பப்படி படிக்கவோ அல்லது வேலை செய்யவோ அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.

    குழந்தைத் தொழிலாளர் ஆய்வைத் தீவிரப்படுத்த வேண்டும்: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழில்சாலைகளிலும், கடைகளிலும் வேலை செய்துவரும், ஏராளமான குழந்தைத் தொழிலாளர்கள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர்.

    தொழில்சாலைகள், கடைகள், பேருந்து நிலையங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி குழந்தைத் தொழிலாளர்களையும், பிச்சை எடுக்கும் குழந்தைகளையும் மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai