சுடச்சுட

    

    கிரிக்கெட்: பாரத் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம்

    By நாமக்கல்  |   Published on : 02nd January 2015 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு ரோட்டரி-பாரத் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் பாரத் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் பிடித்துள்ளது.

    திருச்செங்கோடு ரோட்டரி சங்கம், மாணிக்கம்பாளையம் பாரத் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து 5-ஆம் ஆண்டு ரோட்டரி-பாரத் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை பாரத் பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடத்தின.

    இதில் நாமக்கல், சேலம் ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 25 அணிகள் கலந்து கொண்டன. முதல் இடத்தை பாரத் பாலிடெக்னிக் கல்லூரி அணியும், இரண்டாம் இடத்தை செல்வம் இன்ஸ்டிடியூசன் அணியும், மூன்றாம் இடத்தை பாரத் பாலிடெக்னிக் கிளப் அணியும், நான்காம் இடத்தை நல்லிபாளையம் அணியும் பிடித்தன.

    திருச்செங்கோடு ரோட்டரி சங்கத் தலைவர் பி.செங்குட்டுவன், செயலர் நாகப்பன், முன்னாள் செயலர் கார்த்திகேயன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர்.

    பாரத் பாலிடெக்னிக் கல்லூரி இயக்குநர் பி.ஜெயக்குமார், முதல்வர் முருகன், முதுநிலை நிர்வாக மேலாளர் மாதவன், மனித வளம் மற்றும் மேம்பாட்டுத் துறை மேலாளர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் ஜெயக்குமார் மற்றும் மணிவாசகம் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai