சுடச்சுட

  

  கைத்தறிக் கண்காட்சி: ரூ.75 லட்சம் விற்பனை இலக்கு

  By நாமக்கல்,  |   Published on : 02nd January 2015 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்ட அளவிலான கைத்தறிக் கண்காட்சியில் ரூ.75 லட்சம் அளவு ஜவுளி ரகங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  மத்திய அரசின் கைத்தறி வளர்ச்சி ஆணையம் மற்றும் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கைத்தறிக் கண்காட்சி நாமக்கல் குளக்கரைத் திடல் ஸ்ரீ நாமகிரி அம்மன் திருமண மண்டபத்தில் அண்மையில் தொடங்கியது.

  மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசியது: இக்கண்காட்சியில் சுமார் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு நாமக்கல், ஈரோடு, கோவை, சேலம், மதுரை, திண்டுக்கல், காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களிலுள்ள 50-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட துண்டு ரகங்கள், வேட்டிகள், லுங்கிகள், சேலைகள், பவானி ஜமக்காளம், சென்னிமலை படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், அகர்லிக் சால்வைகள், சேலம் பட்டு வேட்டிகள், ராசிபுரம் பட்டுச் சேலைகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

  வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், விற்பனை செய்யப்படும் அனைத்து வகை கைத்தறித் துணிகளுக்கும் 30 சத தள்ளுபடி வழங்கப்படுகிறது. கைத்தறிக் கண்காட்சியில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள கைத்தறி ஜவுளிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

  கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் க.நடராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai