சுடச்சுட

  

  சேலம் அருகே கருங்கல்பட்டி விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  சேலம் அருகே கருங்கல்பட்டி தெற்கு முனியப்பன் கோயில் தெருவில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலையில் கோயிலைத் திறக்க பூசாரி வந்த போது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.10,000 மதிப்புள்ள சில்லறை காசுகள் உள்ளிட்ட காணிக்கைப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

  இதையடுத்து, கோயில் செயல் அலுவலர் சங்கர் (41) அளித்த புகாரின் பேரில், செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உண்டியல் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களைத் தேடி

  வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai