சுடச்சுட

    

    சேலத்தில் சாலை விபத்து: தீயில் முழுவதும் எரிந்த கார்

    By சேலம்  |   Published on : 02nd January 2015 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கார் ஒன்று முழுமையாக தீப் பிடித்து எரிந்தது. இதில், பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

    சேலம் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்தவர் ஆதித்யன் (46). இவரது மனைவி தமிழரசி (45). இருவரும் காரில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை அதிகாலை சேலத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த அருண் (27) ஓட்டி வந்தார். இந்தக் கார் மல்லூர் பனமரத்துப்பட்டி அருகே வந்த போது பக்கத்தில் சென்ற லாரியின் மீது உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால், காரில் தீப் பிடித்தது. இதை உணர்ந்த ஓட்டுநர் அருண், காரை சாலையில் ஓரம் நிறுத்தினார். காரின் உள்ளே இருந்த தம்பதி, ஓட்டுநர் கீழே இறங்கினர். இதில், தமிழரசி காயமடைந்தார்.

    இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் கார் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இதில் காயமடைந்த தமிழரசி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து மல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai