சுடச்சுட

    

    நாமக்கல் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

    By நாமக்கல்  |   Published on : 02nd January 2015 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கொட்டும் மழையிலும் சுவாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

    நாமக்கல் நகரில் அமைந்துள்ள சாளக் கிராம மலையில், கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் எழில்மிகு சிற்பங்களைக் கொண்ட இரு குகைக் கோயில்கள் (குடவரை) உள்ளன. இக்கோயில்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்பவரால் கட்டப்பட்டது. கிழக்குப் பகுதியில் அனந்தசயனம் எனப்படும் அரவணைக் கிடந்தானாகிய அரங்கநாதனது குடவரைக் கோயில் உள்ளது.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. புத்தாண்டு தினமான வியாழக்கிழமை வைகுண்ட ஏகாதசி வந்ததால் வழக்கத்தை விட அதிகளவிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யத் திரண்டனர்.

    அதிகாலை 3.50 மணிக்குள் திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்ய பூஜை, 4.10 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷங்களுடன் சொர்க்க வாசலுக்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்தனர். கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    வைகுண்ட ஏகாதசியின்போது மழை பெய்ததால் இந்த ஆண்டு முழுவதும் நல்ல மழை பெய்யும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    எஸ்பி எஸ்.ஆர்.செந்தில்குமார் ஆலோசனையின் பேரில், டிஎஸ்பி மனோகரன் தலைமையில், நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கிருஷ்ணன், உதவி ஆணையர் சபர்மதி, கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai