சுடச்சுட

    

    சேலத்தில் உள்ள கைலாஷ மகளிர் கல்லூரியில் புத்தாண்டு வரவேற்பு விழா புதன்

    கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில், மாணவிகள் கேக் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும், சிறுதுளி மாணவியர் மன்றம் சார்பில், கொளத்தூரில் உள்ள கருணாலயா கருணை இல்லத்துக்கு ரூ.10,000 மதிப்புள்ள உபயோகப் பொருள்களை வழங்கினர்.

    இத்துடன், புத்தாண்டு வரவேற்பு நாளில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவிகளுக்கு மரக்கன்று மன்றத்தின் சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு ஏ.வி.எஸ். மற்றும் சக்தி கைலாஷ கல்வி குழுமங்களின் தலைவர் கை.கைலாசம் தலைமை வகித்தார். தாளாளர் கை.ராஜவிநாயகம், செயலாளர் கை.செந்தில்குமார், நிர்வாக இயக்குநர் அருண்குமார், கல்லூரி முதல்வர் வே.சங்கரநாராயணன், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ரேவதி, துணை முதல்வர் ஷெரீன் வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai