சுடச்சுட

    

    மருத்துவப்படியை உயர்த்த ஓய்வூதியர்கள் கோரிக்கை

    By நாமக்கல்,  |   Published on : 02nd January 2015 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல மருத்துவப்படியை ரூ.100-ல் இருந்து ரூ.500-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நாமக்கல் கிளை நிர்வாகிகள் கூட்டம், துணைத் தலைவர் பெரியசாமி தலைமையில் சங்கக் கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது. சங்கத் துணைத் தலைவர் ராமசாமி வரவேற்றார். இணைச் செயலர் ராமன் மாதாந்திர கூட்ட அறிக்கையை வாசித்தார். பொருளாளர் வீரப்பன், சங்க உறுப்பினர்கள் ராமசாமி, சுப்பிரமணியம், நடராஜன், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம், செல்வராஜ் ஆகியோர் பேசினர்.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல மருத்துவப்படியை ரூ.100ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க உரிய ஆணை வெளியிட முதல்வரைக் கேட்டுக்கொள்வது. அனைத்து நோய்களுக்கும அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற அரசு அனுமதிக்க மாநிலச் சங்கம் முயற்சி எடுக்க கேட்டுக் கொள்வது. ஓய்வூதியர்களின் ஒப்படைப்புத் தொகையை 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 12 ஆண்டுகள் பிடித்தம் செய்ய தமிழக அரசை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai