சுடச்சுட

    

    மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்றவர் சாவு

    By பரமத்திவேலூர்,  |   Published on : 02nd January 2015 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்திவேலூர் அருகே மின்சாரம் பாய்ந்ததற்கு சிகிச்சை பெற்று வந்தவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

    பொத்தனூர் கிழக்கு வண்ணாந்துறையைச் சேர்ந்த வேலுசாமி மகன் செல்வம் (40). இவர் பொத்தனூர் காவிரி ஆற்றுக்கு அருகே பகவதி சிறு விவசாயிகள் நீரேற்று பாசன சங்கத்தின் மின் மோட்டார் இயக்குநராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த வியாழக்கிழமை மாலை மின் மோட்டாரை இயக்கச் சென்ற போது எதிர்பாராவிதமாக மின்சாரம் செல்வத்தின் மீது மின்சாரம் பாய்ந்ததாகத் தெரிகிறது.

    இதனால் பலத்த காயமடைந்த செல்வம், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai