சுடச்சுட

    

    ராசிபுரத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆங்கிலப் புத்தாண்டு

    By ராசிபுரம்,  |   Published on : 02nd January 2015 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் பகுதியில் ஸ்ரீ பொன்வரதராஜப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு விழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

    ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு விழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதையொட்டி நள்ளிரவு முதல் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. வியாழக்கிழமை அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன்வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம், வாசனைத் திரவியங்களைக் கொண்டு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன.

    ஸ்ரீ பொன்வரதராஜப் பெருமாள் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு புன்னியாகவாசனம் செய்யப்பட்டு, சங்கல்பம் நடந்தது. மூலவர் திருமேனிகளுக்கும், உற்சவ திருமேனிகளுக்கும் முத்தங்கி சேவை சாத்தப்பட்டது.

    பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருவாசல் வழியாக அழைத்து வரப்பட்டார். இதனை தொடர்ந்து கோயிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று பரமபத வாசல் வழியாக வந்து தரிசனம் செய்தனர்.

    ராசிபுரம் ஜன் கல்யாண் அமைப்பு சார்பில் 24-ஆவது ஆண்டாக 50 ஆயிரம் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai