சுடச்சுட

  

  ஊரக வளர்ச்சித் துறை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

  By நாமக்கல்,  |   Published on : 03rd January 2015 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், பணிகளைத் தரமாகவும், விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

  நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் தாய் திட்டம், ஊராட்சி ஒன்றிய பொது நிதி, கிராம ஊராட்சி வளர்ச்சி நிதி, மாகத்மா தேசிய ஊரக வேலை வேலைத் திட்டம், ஊராட்சி ஒன்றிய பராமரிப்பு நிதி, சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

  எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திப்பரமாதேவி, பொட்டிரெட்டிபட்டி, தேவராயபுரம், பவித்திரம் மற்றும் பவித்திரம் புதூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.70.53 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், அனைத்து பணிகளையும் தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

  வட்டார வளர்ச்சி அலுவலர் சி.சந்திரசேகர், ஒன்றியப் பொறியாளர் எம்.பாஸ்கர், உதவிப் பொறியாளர் டி.அருண், பணி மேற்பார்வையாளர்கள் ஆர்.மங்கையர்க்கரசி, எம்.ராஜேஸ்வரன் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai