சுடச்சுட

  

  காவிரியாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

  By பரமத்திவேலூர்  |   Published on : 03rd January 2015 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரை காவிரியாற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

  பரமத்திவேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரை பகுதியில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு அனுமதியின்றி சிலர் மணல் எடுத்து வருவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்படி, பரமத்திவேலூர் வட்டாட்சியர் மாதேஷ்வரி தலைமையிலான அதிகாரிகள், வெங்கரை பகுதியில் சோதனை நடத்தினர்.

  அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. வட்டாட்சியர் மாதேஷ்வரி உடனடியாக அந்த டிராக்டரை பறிமுதல் செய்தார். மேலும், இதுபோன்று அரசு அனுமதியின்றி மணல் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai