சுடச்சுட

    

    குடிநீர் கிருமியினால் கோழிகளுக்கு நோய்:ஆராய்ச்சி நிலையம் தகவல்

    By நாமக்கல்  |   Published on : 03rd January 2015 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிநீரில் உள்ள கிருமியினால் கோழிகளுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆய்வகத்தில் சோதனை செய்த குடிநீரைப் பயன்படுத்துமாறு பண்ணையாளர்களுக்கு ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

    நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அடுத்த நான்கு நாள்களுக்கு பனிமூட்டம் குறைந்தும், பகல் வெப்பம் அதிகரித்தும் காணப்படும். இவ் வானிலையில் கோழிகளில் தீவன எடுப்பு சற்று அதிகமாக இருக்கும். தீவனப் பொருள்களில், ஈரப்பதம் உள்ள மக்காச்சோளத்தை நச்சுப் பரிசோதனை செய்த பின்னர் பயன்படுத்த வேண்டும். கோழியின ஆய்வகத்தில் கடந்த வாரம் ஆய்வு செய்யப்பட்ட, இறந்த கோழிகள் பெரும்பாலும் தண்ணீரில் உள்ள கிருமியினால் ஏற்படும் நோயினாலும், மேல் மூச்சுக்குழாய் நோயினாலும் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இதனால் பண்ணையாளர்கள் குடிநீரில் கிருமி மாசுபாடு உள்ளனவா என ஆய்வகத்தில் ஆய்வுசெய்து, சுத்தமான குடிநீரை அளிப்பதுடன், பண்ணை உயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai