சுடச்சுட

    

    சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி: மகளிர் சுய உதவிக் குழுவினர் விண்ணப்பிக்கலாம்

    By நாமக்கல்,  |   Published on : 03rd January 2015 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மேற்கொள்ளப்படும் சுய உதவிக் குழுக்களின் கடன் இணைப்புத் திட்டம், கல்வி, காப்பீடு, கடன் திரும்பச் செலுத்தல் ஆகிய வங்கி செயல்பாடுகளுக்காக சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

    விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்.

    மலைப் பகுதிகளில் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்கும் தேதியன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் பகுதிகளாக இருப்பின் அங்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் இல்லாத பட்சத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    கணினி அனுபவம், அலைபேசியில் குறுந்தகவல்கள் அனுப்புதல் மற்றும் பெறுதல் தொடர்பான அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சிறந்த பேச்சுத் திறன், வங்கி, ஊராட்சிகளுக்குள் சமூக அடிப்படையிலான கடன் திரும்பப் பெறுதலுக்கான செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

    மோகனூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், புதுச்சத்திரம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்தை உரிய படிவத்தில் நிறைவு செய்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் சம்பந்தப்பட்ட வட்டாரங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது வட்டாரத் திட்ட மேலாளரிடம் வரும் 9ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தை 04286- 281131 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai