சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற தம்பதி மீது கார் மோதியதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மனைவி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

    பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள நெட்டையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவர் தனது மனைவி சின்னப்பிள்ளையுடன் (42) பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், தனது இரு சக்கர வாகனத்தில் கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளனர்.

    அப்போது கொடைக்கானலில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற கார் ஒன்று சுப்பிரமணி வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் சுப்பிரமணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சின்னப்பிள்ளை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி, வெள்ளிக்கிழமை காலை சின்னப்பிள்ளை உயிரிழந்தார்.

    விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai