சுடச்சுட

  

  தேசிய லெக் கிரிக்கெட் போட்டிகள் தொடக்கம்

  By குமாரபாளையம்,  |   Published on : 03rd January 2015 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குமாரபாளையத்தில் 3-ஆவது தேசிய லெக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கின.

  பன்னாட்டு லெக் கிரிக்கெட் கவுன்சில் பொதுச் செயலர் ஜே.பி.வர்மா துவக்க விழாவுக்குத் தலைமை வகித்தார். குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் சிவசக்தி கே.தனசேகரன், துணைத் தலைவர் கேஎஸ்எம்.பாலசுப்பிரமணி போட்டிகளைத் தொடக்கி வைத்தனர். முதல்வர் எஸ்.விஜயகுமார் வரவேற்றார்.

  கிரிக்கெட்டுக்கு இணையாகவும், கால்பந்துக்கு மாற்றாகவும் விளையாடப்படும் இவ்விளையாட்டு கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. உருண்டு வரும் கால்பந்தை உதைத்துவிட்டு, ஓடி ரன்களை எடுக்கும் இவ்விளையாட்டு தற்போது 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் விளையாடப்படுகிறது. தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் லெக் கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

  42 முதல் 48 அடிவரையில் பிட்ச்சும், 70 முதல் 120 அடி சுற்றளவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். உடலில் காயம் படாமல் விளையாடப்படும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.

  இவ்விளையாட்டைத் தமிழகத்தில் வளர்க்கும் வகையில் இப்போட்டிகள் நடத்தப்படுவதாக ஜே.பி.வர்மா தெரிவித்தார். தமிழ்நாடு லெக் கிரிக்கெட் சங்கப் பொதுச் செயலர் ஏ.பிரபு, தலைமை ஆலோசகர் எஸ்.எம்.வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  தில்லி, மத்திய பிரதேசம், கோவா, உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் உள்பட 16 அணிகள் இப்போட்டியில் பஙகேற்றுள்ளன. இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai