சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பலத்த இடியுடன் மழை பெய்தது. இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

    இதனால், நகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 66 மி.மீ மழை பதிவாகியது. நாமக்கல்லில் 18, மங்களபுரத்தில் 26, எருமப்பட்டியில் 45, ராசிபுரத்தில் 5, சேந்தமங்கலத்தில் 32 மி.மீ மழை பதிவாகியது.

    கொல்லிமலையில் பலத்த மழை

    கொல்லிமலையில் விவசாயிகள் மிளகு, காப்பி, ஆரஞ்சு உள்பட பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ளனர். இங்கு கடந்த சில வாரமாக மழை பெய்யவில்லை. போதிய மழை இல்லாததால், தண்ணீர் இன்றி விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் கொல்லிமலையில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால், செம்மேடு, சோளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai