சுடச்சுட

  

  நெல் பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் கண்காணிப்புக் குழு

  By நாமக்கல்  |   Published on : 03rd January 2015 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெல் பயிரில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்மைத் துறை சார்பில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் கதிர்விட்டு பால் பிடிப்பு தருணத்தில் உள்ளன. இந்தப் பருவத்தில் நெல் பயிரை கதிர் நாவாய், குலை நோய், இலை கருகல் நோய், நெல் பழ நோய் என பல நோய்கள் தாக்கி சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் அசோக் தலைமையில் வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

  இந்தக் குழுவினர் களியனூர் கிராமத்தில் உள்ள வயல் வெளிகளை சோதித்தனர். குலை நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் இருப்பதை அறிந்து, அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு அளித்தனர்.

  மேலும், தினந்தோறும் பல்வேறு கிராமங்களில் பயணம் மேற்கொண்டு, விவசாயிகளின் நெல் வயல்களை கண்காணித்து, அதில் காணப்படும் பூச்சி நோய்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் வழிமுறைகளை தெரிவிக்க உள்ளனர்.

  நடப்பு சம்பா சாகுபடி அறுவடை முடியும் வரை இந்தக் குழுவினர் தொடர்ந்து பல்வேறு கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளின் பயிர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். விவசாயிகள் தங்கள் வயல்களில் பூச்சி நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட்டால், பள்ளிபாளையம், வெப்படை, குமாரபாளையம் வேளாண்மை அலுவலகங்களுக்கு தகவல் கொடுத்து தேவையான தொழில்நுட்ப உதவிகளைப் பெறலாம்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai