Enable Javscript for better performance
\\\"மாணவர்களுக்கு கல்வியோடு விளையாட்டு, கலாசாரப் பங்கேற்பு அவசியம்- Dinamani

சுடச்சுட

    

    "மாணவர்களுக்கு கல்வியோடு விளையாட்டு, கலாசாரப் பங்கேற்பு அவசியம்

    By 'ராசிபுரம்  |   Published on : 03rd January 2015 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவர்கள் கல்வி பயில்வதுடன், விளையாட்டு, கலாசார நிகழ்வுகளில் பங்கேற்பதும் அவசியம் என, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவச் சங்கம் ஆகியவற்றின் முன்னாள் மாநிலத் தலைவர் மருத்துவர் கே.பிரகாசம் குறிப்பிட்டார்.

    பாவை கல்வி நிறுவனங்கள் சார்பில், இளைஞர் வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். தாளாளர் மங்கைநடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தார். உடல் நலம், ஆரோக்கியம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழாவில் மருத்துவர் கே.பிரகாசம் சிறப்பு விருந்தின

    ராகப் பங்கேற்று மேலும் பேசியது:

    சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும் திறமை உள்ளது. இதை சரியான முறையில் பயன்படுத்தினால் அனைவரும் சாதிக்கலாம். இன்றைய சூழலில் பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது இல்லை. இன்றைய இளைஞர்களிடம் ஆற்றல், திறமை அதிக அளவு உள்ளது. ஆனால், அதை வழி நடத்தாததால், திறன் வீணடிக்கப்படுகிறது. சிறு வயது முதலே உடல் பயிற்சி அவசியம் என்பதால்தான் பாரதியார் கூட ஓடி விளையாட வேண்டும் என்றார். இதுபோன்ற உடல் பயிற்சி இல்லாத காரணத்தினால்தான் நோய்கள் அதிகரித்து, மருத்துவமனைகள் அதிகரிக்கவும் காரணம். மேலும், ரத்த தானம் போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது.

    கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வது பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள உதவும். நேர்முகத் தேர்வுகளில் நடத்தப்படும் குழு கலந்தாய்வு, எழுத்துத் தேர்வு போன்றவற்றிற்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai