சுடச்சுட

    

    மாநில, தேசிய அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களை நடத்த வலியுறுத்தல்

    By நாமக்கல்,  |   Published on : 03rd January 2015 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநில மற்றும் தேசிய அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    அதன் ஆலோசனைக் கூட்டம், கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தலைமையில் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர்கள் கதிரேசன், சுப்ரமணியம், துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமசாமி, கள் இயக்க மாவட்ட அமைப்பாளர்கள் அருண், ரகுநாதன், கோபிநாத், தங்கராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசின் தவறான திட்டமிடல் மற்றும் உணவு பண்ட இறக்குமதியின் காரணமாக விவசாயம் அழிவின் விளிம்பில் உள்ளது. இதனால் விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றி, விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கூடாது. குறைந்துவரும் காங்கேயம் இனக் காளைகளை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மாநில மற்றும் தேசிய அளவில் விவசாயிகளின் குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai