சுடச்சுட

  

  ராசிபுரத்தில் பூங்காவை சீரமைக்க வலியுறுத்தல்

  By ராசிபுரம்  |   Published on : 03rd January 2015 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரத்தில் பராமரிப்பின்றி உள்ள பூங்காவை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.

  ராசிபுரம் பட்டணம் சாலையில் உள்ளது ஸ்ரீவேலா செட்டியார் பூங்கா. நகராட்சி நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பழைமையான பூங்கா, தற்போது சுற்றுச்சுவரின்றி, குப்பை மேடாக, பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இந்தப் பூங்காவை அந்த வழியே செல்வோர் திறந்தவெளிக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவதாகவும், இதனால், அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகவும் சேகுவேரா நற்பணி இயக்கத்தினர் புகார் கூறினர்.

  மேலும், இந்தப் பூங்காவைச் சீரமைத்து, பொழுதுப் போக்கு அம்சங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட, நகராட்சி நிர்வாகங்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.

  இதுகுறித்து சேகுவேரா நற்பணி இயக்கத்தின் தலைவர் பிடல் சேகுவேரா, நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: பூங்காவின் பாழடைந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது.

  மேலும், பூங்கா குப்பை மேடாக மாறி வருவதுடன், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

  இரவு நேரங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால், பூங்கா அருகில் உள்ள குழந்தைகள் மையத்துக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பூங்காவை மாவட்ட நிர்வாகம் சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், அங்கன்வாடி மையத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai