சுடச்சுட

  

  கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரைவைப் பணிகள் தொடக்கம்

  By அரூர்  |   Published on : 04th January 2015 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்டம், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரைவைப் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.

  பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் நடைபெற்ற 2014-15-ஆம் ஆண்டுக்கானத் தொடக்கவிழாவில் அந்த ஆலையின் தலைவர் வளர்மதி முருகேசன் தலைமை வகித்தார்.

  அரைவைப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தொடக்கிவைத்தார். சர்க்கரை ஆலையில் நிகழாண்டில் சுமார் 1.30 லட்சம் டன்கள் கரும்பு அரைவை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சுமார் 5,500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தினசரி கரும்பு அரைவைப் பணிகள் 2,500 டன்களாகவும், கரும்பு வெட்டும் பணியில் 250 குழுக்கள் ஈடுபட்டிருப்பதாகவும் சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  விழாவில் அந்த ஆலையின் மேலாண்மை இயக்குநர்

  ச.கவிதா, வருவாய்க் கோட்டாட்சியர் வி.ஷகிலா, கரும்பு பெருக்கு அலுவலர் இ.குணசேகரன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் சி.தென்னரசு, லலிதா குப்புசாமி,

  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் கீரை சம்பத், கே.வேலு, ஆலையின் துணைத் தலைவர் ஆர்.பார்த்திபன், நிர்வாக இயக்குநர்கள் சுபா சம்பத், ஏ.பாபு, லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் மோ.ஆனந்தன், ஊராட்சித் தலைவர் பி.வி.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai