சுடச்சுட

    

    சாலையில் ஓடும் கழிவு நீரை வெளியேற்றக் கோரிக்கை

    By நாமக்கல்  |   Published on : 04th January 2015 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலையில் வழிந்தோடும் கழிவு நீரை வெளியேற்ற வடிகால் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட 4-ஆவது வார்டு, கிழக்குத் தெருவில், அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்களுக்கு கழிவுநீர் வடிகால் வசதி செய்து தரவில்லை. இதனால் சாக்கடை நீர் சாலையில் வெளியேறி வருகிறது.

    அவ்வழியாக நடந்து செல்லும் மக்கள் கழிவு நீரில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாலையில் செல்லும் வாகனங்கள் கழிவு நீரை வாரி இறைப்பதால் அவ்வழியாக நடந்து செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். வழிந்தோடும் கழிவு நீரால் சாலையில் பாசி பிடித்துக் காணப்படுகிறது.

    இதனால் அவ்வழியாகச் செல்லும் மக்கள், கீழே விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம், பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    நாமக்கல், ஜன. 3: கோழித் தீவன மூலப்பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், செயற்குழு உறுப்பினர்கள் ரங்கநாதன், சண்முகம், பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் லட்சுமணன் ஆகியோர் மத்திய வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:

    தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகளை கேரளாவுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லும்போது நுழைவு வரி 14 சதவீதம் விதிக்கப்படுகிறது. நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் கறிக்கோழிக்கு நுழைவு வரி விதிக்கப்படவில்லை. கேரள அரசின் இந்த வரிவிதிப்பால் கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த வரிவிதிப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சத்துணவில் இலவச முட்டை வழங்கப்படுவதுபோல, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் முட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அமெரிக்காவில் கழிவுகளாகும் கோழிக் கால்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்வது தமிழக கறிக்கோழி உற்பத்தியாளர்களைப் பெரிதும் பாதிக்கும். பொதுமக்களின் உடலுக்கும் அது தீங்கு ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் அமெரிக்க கோழிக்கால் இறக்குமதிக்கு அனுமதிக்கக் கூடாது.

    கோழிப் பண்ணைத் தொழிலில் ஆண்டுக்கு 12 மில்லியன் டன் மக்காச்சோளம், 6 மில்லியன் டன் சோயா பயன்படுத்தப்படுகிறது. இவை தேவையான அளவு கிடைக்காததால், முட்டை மற்றும் கறிக்கோழி உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. எனவே மத்திய அரசு கோழித் தீவன மூலப்பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பண்ணையாளர்களுக்கு உதவ வேண்டும். முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான ஏற்றுமதி மானியத்தை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai