சுடச்சுட

    

    பரமத்தி முகாமில் 1015 பேருக்கு மருத்துவப் பரிசோதனை

    By பரமத்திவேலூர்,  |   Published on : 04th January 2015 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தியில் சனிக்கிழமை நடந்த இலவச மருத்துவ முகாமில் 1015 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

    நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சனிக்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, பல் நோய்களுக்குப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளும் இருதயம் தொடர்பான நோய்களுக்கு ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    ரத்த மாதிகள் எடுக்கப்பட்டு சர்க்கரை, ரத்த அழுத்தம் குறித்த பரிசோதனைகளும் செய்யப்பட்டன. முகாமில் மொத்தம் 1015 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி, மருத்துவமுகாமுக்குத் திடீரென வந்து மருத்துவ வசதிகள் குறித்தும், பரிசோதனைகள் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    முகாமுக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் குமார்,திருநாவுக்கரசு, முருகேசன், ராஜ்குமார், அப்துல் ரஹீம் ஆகியோர் செய்திருந்தனர். பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai