சுடச்சுட

    

    அதிமுக உள்கட்சித் தேர்தலில் போட்டியிட மனு வழங்கிய தொண்டர்கள்

    By ராசிபுரம்  |   Published on : 05th January 2015 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் நகர, ஒன்றியப் பொறுப்புகளுக்குப் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் தேர்தல் பொறுப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மனுப் பெற்றனர்.

    அதிமுக கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் பல கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதற்கான மாவட்ட தேர்தல் பொறுப்பாளர், ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத் தேர்தல் பொறுப்பாளராக தமிழக மீன் வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் மற்றும் நகர, ஒன்றிய, பேரூராட்சி வாரியாக தேர்தல் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ராசிபுரம் நகரம், ஒன்றியம், நாமகிரிப்பேட்டை கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், வெண்ணந்தூர் ஒன்றியம் மற்றும் 7 பேரூராட்சிகளுக்கு மனுப் பெரும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

    தேர்தலில் போட்டியிடுவோர் அதற்கான மனுவை மாவட்டத் தேர்தல் பொறுப்பாளரும், அமைச்சருமான கே.ஏ.ஜெயபால், மாவட்ட அதிமுக செயலரும் அமைச்சருமான பி.தங்கமணி, பி.ஆர்.சுந்தரம் எம்பி., ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai